ஸ்ரீ கணேஷாய நமஹ!! ஸ்ரீ மாத்ரே நமஹ! ஸ்ரீ குருப்யோ நமஹ!
ஸ்ரீ வித்யா வழிபாட்டு முறையை பயில தங்களது ஆர்வத்திற்கு நன்றி!
ஸ்ரீ வித்யை, மனிதர்களுக்கு அம்பாளின் பரிபூர்ண அருளையும், எல்லையில்லா பேர் ஆனந்தத்தை நிரந்தரமாக அளிக்கக்கூடிய ஓர் அறிய வழிபாடு மற்றும் வாழ்வியல் முறை!!
நமது பாரத தேசத்தின் பெரும் பாரம்பரியமிக்க ஸ்ரீ பரசுராம கல்ப சூத்திரத்தை தழுவிய , உண்மையான, ஸ்ரீ வித்யா வழிபாட்டு முறையை கற்க விருப்பம் உள்ளவர்களுக்கு குருஜி ஸ்ரீ குரு கருணாமயா அவர்களிடம் இருந்து நேரடியாக கற்க ஓர் அறிய வாய்ப்பு!
2024 ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றும் செப்டெம்பர் 1ஆம் தேதி, மாலை 5:00 மணியிலிருந்து 9:00 மணி வரை (இந்தியா நேரம்) ஸ்ரீ குருஜி நேரடியாக ஆன்லைனில் கற்பிக்கப்போகிறார்!
குருஜி ஸ்ரீ குரு கருணாமயா அவர்கள் ஸ்ரீ வித்யா வழிபாட்டு முறையை அவர்களின் குருவான தேவிபுரம் ஸ்ரீ ஸ்ரீ அமிர்தானந்த சரஸ்வதி அவர்களிடம் முறையாக பயின்று, 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நித்திய வழிபாடாக கடைபிடித்து உலக அளவில் பல சீடர்களுக்கு மந்திர தீக்ஷை அளித்து வருகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் ஸ்ரீ குரு கருணாமயா அவர்களிடம் இருந்து ஸ்ரீ வித்யா மந்திரங்களுக்கான தீக்ஷயை பெறுவதற்கு நீங்கள் இரண்டு நாட்களிலும் அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் பங்கேற்கவேண்டும்.
அவ்வாறு பங்கேற்றவர்களுக்கு இரண்டு நாள் அனைத்து வகுப்புகளின் வீடியோ இணைப்பு தங்களது பயிற்சிக்காக வழங்கப்படும்.
இந்த ஸ்ரீ வித்யா வழிபாட்டு முறை வகுப்பின் சிறப்பு அம்சங்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றிய விவரங்களை கீழே பார்க்கவும்
தாங்கள் இந்த இரண்டு நாள் ஸ்ரீ வித்யா வழிபாட்டு முறையை கற்கும் வகுப்பில் பதிவு செய்ய கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்!
https://srimeru.org/cloud/workshopregistration
இந்த அறிய மற்றும் பாரம்பரியமான ஸ்ரீ வித்யா வழிபாட்டுமுறை வகுப்புகள் தீவிர ஆர்வமுள்ளவர்கள் மற்றும் நித்திய பூஜை செய்ய ஆர்வமுள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தயவு கூர்ந்து கவனிக்கவும்: ஸ்ரீ வித்யா ஞான பீடம் இவ்வகுப்புகளுக்காக முன்கூட்டியே பல செலவுகளை மேற்கொண்டுள்ளபடியால் ஒரு முறை செலுத்திய கட்டணத்தை ரத்து செய்யவோ அல்லது திருப்பி தரவோ இயலவில்லை. தவிர்க்க முடியாத காரணதால் உங்களால் பங்கேற்க முடியாவிடில், அடுத்து வரும் வகுப்புகலில் சேர்வதற்கான வைப்பு அளிக்கப்படும்.
நீங்கள் உங்களது பதிவை முடித்து உரிய கட்டணத்தையும் கட்டி முடித்தவுடன் மற்ற பதிவு செய்த மாணவர்களுடன் டெலிகிராம் (Telegram) செயலியில் இணைக்கப்படுவீர்கள். அவ்வாறு இணைந்த குழுமத்தை ஸ்ரீ குருஜி பங்கேற்று மேற்பார்வை செய்து மாணவர்கக்குக்கு சரியான பயிற்சியை வழங்குவார்.
தங்களது வகுப்பு ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்குக முன்னர் தங்கள் ஒவ்வொருவரின் username மற்றும் password அனுப்பப்படும்.
* தயவுசெய்து தங்களுக்கு அளிக்கப்பட்ட அறிவுறுத்தல்களை (instructions) சரிவர பின்பற்ரறுமாறு வேண்டிக்கொள்கிறோம். அது உங்களுக்காக நாங்கள் சேவை செய்ய உதவும்.
மிக்க நன்றி !! தங்களது ஸ்ரீ வித்யா ஆன்மீக பயணத்தில் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் கருணையால் பூரண வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்துக்கள்!!